மனிஷ் பாண்டி, தாகூர் அபாரம்!!! : இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

India beat Sri Lanka fourth Match Nidahas Trophy 2018

(India beat Sri Lanka fourth Match Nidahas Trophy 2018)

சுதந்திரக் கிண்ணத்தின் நான்காவது போட்டியில் இலங்கை அணியுடன் மோதிய இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் ஆரம்பத்தில் மழை குறுக்கிட்டதால் அணிக்கு தலா 19 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதன்படி நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணிசார்பில் அதிரடியாக ஆடிய குசல் மெண்டிஸ் மாத்திரம் 55 ஓட்டங்களை பெற ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணியின் சர்துல் தாகூர் 4 விக்கட்டுகளையும், வொஷிங்டன் சுந்தர் 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் விக்கட்டுகள் சரிக்கப்பட்டாலும், மனிஷ் பாண்டி மற்றும் தினேஸ் கார்த்திக் அபாரமாக ஆடி17.3 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தனர்.

மனிஷ் பாண்டி 42 ஓட்டங்களையும், தினேஸ் கார்த்திக் 39 ஓட்டங்களையும் குவித்தனர்.

இதன்படி பங்கேற்ற மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், இலங்கை அணி 2 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், பங்களாதேஷ் 2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

<<Related News>>

<<Our other websites>>

 Tags : India beat Sri Lanka fourth Match Nidahas Trophy 2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here