பந்து வீச்சில் மிரட்டிய ரபாடா! : 101 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது ஆஸி.!

South Africa vs Australia second test day 4 news Tamil

(South Africa vs Australia second test day 4 news Tamil)

தென்னாபிரிக்க – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 101 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.

தென்னாபிரிக்க அணியை விட 139 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ரபாடாவின் பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்கமுடியாமல் 239 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணிசார்பில் உஸ்மான் கவாஜா 75 ஓட்டங்களையும், மிச்சல் மார்ஷ் 45 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 6 விக்கட்டுகளையும், மஹாராஜ் மற்றும் என்கிடி ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 243 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், தென்னாபிரிக்க அணி 382 ஓட்டங்களை குவித்திருந்தது.

<<Related News>>

<<Our other websites>>

 Tags : South Africa vs Australia second test day 4 news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here