இந்தியன் வேல்ஸ் ஓபன் : நொவெக் ஜொகோவிச் அதிர்ச்சித் தோல்வி

Indian Wells Tennis Novak Djokovic news Tamil

(Indian Wells Tennis Novak Djokovic news Tamil)

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் இந்தியன் வேல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் சேர்பியாவின் முன்னணி வீரர் நொவெக் ஜொகோவிச் அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளார்.

இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் ஜப்பானின் டெரோ டேனியலை எதிர்கொண்ட ஜொகோவிச் போராடி தோல்வியடைந்தார்.

ஜொகோவிச் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபனில் தென்கொரிய வீரர் சங் ஹியோனிடம் தோல்வியடைந்து வெளியேறியிருந்தார்.

பின்னர் தனது முழங்கை உபாதையை கருத்திற்கொண்டு சத்திர சிகிச்சை மேற்கொண்ட ஜொகோவிச், ஓய்விலிருந்து தற்போது நடைபெற்று வரும் இந்தியன் வேல்ஸ் ஓபனில் கலந்துக்கொண்டார்.

ஜப்பானின் டெரோ டேனியலை எதிர்கொண்ட ஜொகோவிச், சிறப்பான போட்டியை கொடுத்தாலும் 2-1 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

முதல் செட்டை 6-7 (3-7) என இழந்த ஜொகோவிச், இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றினார். எனினும் மூன்றாவது செட்டை 1-6 என இழந்த இவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

<<Related News>>

<<Our other websites>>

 Tags : Indian Wells Tennis Novak Djokovic news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here