இந்தியன் வேல்ஸ் இரண்டாவது சுற்றில் ஜேர்மனியின் முன்னணி வீரர் தோல்வி

Indian Wells Tennis 2018 Alexander Zverev news Tamil

(Indian Wells Tennis 2018 Alexander Zverev news Tamil)

இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் தோல்வியடைந்துள்ளார்.

இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டித் தொடரின் இரண்டாவது சுற்றில் ஜேர்மனியின் வளர்ந்து வரும் வீரரான அலெக்ஸாண்டர் ஸ்வெரவ், போர்த்துகல் வீரர் ஜொவோ சவுசாவை எதிர்கொண்டார்.

அலெக்ஸாண்டர் ஸ்வெரர் கடந்த காலங்களில் நடைபெற்ற முக்கிய போட்டிகளில் வெற்றிபெற்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் 85வது நிலை வீரரான ஜொவோ சவுசா, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்வெரவ்வை வீழ்த்தியுள்ளார்.

முதல் செட்டை 6-4 என ஜொவோ சவுசா இலகுவாக கைப்பற்ற, இரண்டாவது செட்டை ஸ்வெரவ் 7-5 என கைப்பற்றி போட்டியை சமப்படுத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவது செட்டில் சிறப்பாக ஆடிய ஜொவோ சவுசா 6-4 என வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியதுடன், ஸ்வெரவ் போட்டியிலிருந்து வெளியேறினார்.

ஜொவோ சவுசா தனது மூன்றாவது சுற்றில் கனடா வீரர் மிலோஸ் ரெவோனிக்கை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Related News>>

<<Our other websites>>

 Tags : Indian Wells Tennis 2018 Alexander Zverev news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here