ஹர்ரி கேன் உபாதை குறித்து அவதானம் செலுத்தும் டொட்டென்ஹம்!

Harry Kane injury update news Tamil

(Harry Kane injury update news Tamil)

டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர் அணியின் முன்னணி வீரர் ஹர்ரி கேன் நேற்று நடைபெற்ற போட்டியின் போது கணுக்கால் உபாதைக்குள்ளாகியுள்ளார்.

பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் டொட்டென்ஹம் மற்றும் புவர்னெமவுத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டொட்டென்ஹம் அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் டொட்டென்ஹம் அணிசார்பில் விளையாடிய ஹர்ரி கேன் தங்களுடைய அணியின் கோல் காப்பாளருடன் மோதியே உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.

பின்னர் வைத்தியர்கள் பரிசோதனை செய்ததுடன், ஹர்ரி கேன் மைதானத்திலிருந்து வெளியேறினார்.

ஹர்ரி கேனின் உபாதைக்கான ஸ்கேன் பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை டொட்டன்ஹம் அணி, சுவான்சி சிட்டி அணியை எதிர்கொள்ளவுள்ளதுடன், அடுத்த வாரம் இங்கிலாந்து அணி, இத்தாலி அணிக்கெதிரான இரண்டு நட்பு ரீதியான போட்டியில் விளையாடவுள்ளது.

குறித்த போட்டிகளில் ஹர்ரி கேன் விளையாடுவார? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. (Football News in Tamil)

<<Related News>>

<<Our other websites>>

 Tags : Harry Kane injury update news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here