பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பம்!!!

Big Match 2018 news Tamil

(Big Match 2018 news Tamil)

நாட்டில் நிலவிவந்த மோசமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகளுக்கிடையிலான பெரும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் அமுலில் உள்ள அவசரகால நிலை மற்றும் கண்டியில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் போன்ற காரணங்களினால் புனித அந்தோனியார் – புனித திருத்துவக் கல்லூரி மற்றும் புனித சில்வஸ்டார் – கண்டி வித்தியார்த்த கல்லூரிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது புனித அந்தோனியார் – புனித திருத்துவக் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி எதிர்வரும் 16-17ம் திகதிகளில் நடைபெறும் எனவும், புனித சில்வஸ்டார் – கண்டி வித்தியார்த்த கல்லூரிகளுக்கிடையிலான போட்டி எதிர்வரும் 21-22ம் திகதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவி வருவதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<Related News>>

<<Our other websites>>

 Tags : Big Match 2018 news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here