இந்தியன் வேல்ஸ் ஓபன் : செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது சுற்றில் வெற்றி

Indian Wells Tennis 2018 Serena Williams news Tamil

(Indian Wells Tennis 2018 Serena Williams news Tamil)

இந்தியன் வேல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெற்றிபெற்றுள்ளார்.

இந்தியன் வேல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அவுஸ்திரேலியாவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகின்றது.

இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் செரீனா, நெதர்லாந்து வீராங்கனை கிவி பெர்டன்ஸை எதிர்கொண்டு, 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

இந்த போட்டியின் முதல் சுற்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, செட் 7-6 என சமனிலையில் முடிவடைந்தது. இதனால் செட்டின் வெற்றியை தீர்மானிக்கும் டை பிரேக்கர் வழங்கப்பட்டது.

டை பிரேக்கரில் சிறப்பாக ஆடிய செரீனா வில்லியம்ஸ் 7-6 என வெற்றிபெற்றார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் சிறப்பாக ஆடிய செரீனா 7-5 என வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

செரீனா வில்லியம்ஸ் தனது அடுத்த சுற்றில் தனது சொந்த சகோதரி வீனஸ் வில்லியம்ஸை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Related News>>

<<Our other websites>>

 Tags : Indian Wells Tennis 2018 Serena Williams news Tamil

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here