இத்தாலி சீரிஸ் ஏ : டொரினோ அணியை வீழ்த்தியது ரோமா!

Roma vs Torino Italian series news Tamil

(Roma vs Torino Italian series news Tamil)

இத்தாலியில் நடைபெற்று வரும் சீரிஸ் ஏ உதைப்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டியில் ரோமா அணி வெற்றிபெற்றுள்ளது.

இத்தாலி சீரிஸ் ஏ உதைப்பந்தாட்ட தொடரில் 33 உள்ளூர் அணிகள் பங்கேற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெற்ற போட்டியில் ரோமா மற்றும் டொரினோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியின் முதற்பாதியில் இரண்டு அணிகளும் கோலடிக்கும் வாய்ப்புகள் தவறவிடப்பட்டன. எனினும் இரண்டாவது பாதியில் தங்களது ஆதிக்கத்தை செலுத்திய ரோமா அணி 3 கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தது.

ரோமா அணிசார்பில் மனோலஸ் 56வது நிமிடத்திலும், டி ரோஸி 73வது நிமிடத்திலும் கோலடித்ததுடன், பெல்லெகிரினி 90+3வது நிமிடத்தில் கோலடித்தார்.

எவ்வாறாயினும் இந்த போட்டியில் இறுதிவரை போராடிய டொரினோ அணி கோலடிக்க முடியாமல் தோல்வியடைந்தது.

<<Related News>>

<<Our other websites>>

 Tags :Roma vs Torino Italian series news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here