அம்பாந்தோட்டை அணியை வீழ்த்தி சம்பியனானது முல்லைத்தீவு அணி!

Mullaitivu vs Hambantota Cricket news Tamil

(Mullaitivu vs Hambantota Cricket news Tamil)

முல்லைத்தீவு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி வெற்றி பெற்றுள்ளது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜென்ரல் துஸ்யந்த ராஜகுரு அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய 59 ஆவது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் ருவான்வணிக சூரிய அவர்களது வழிகாட்டலின் கீழ் 59 – 2 ஆவது படைத்தளபதியின் கட்டளை அதிகாரி கேணல் சாணக்க ரத்னாயக்க அவர்களது தலைமையில் இனங்களுக்கிடையில் சமாதான நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் அம்பாந்தோட்டை மாவட்ட கிரிக்கெட் சம்மேளன அணிக்கும் முல்லைத்தீவு மாவட்ட கிரிக்கெட் சம்மேளன அணிக்குமான போட்டி முள்ளிவளை வித்தியானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக 59 ஆவது படைப்பிரிவின் படைத்தளபதி பிரிகேடியர் ருவான் வணிகசூரிய மற்றும் சிறப்பு விருந்திரனர்களாக முல்லை கல்வி வலய பணிப்பாளர் சு.பிரபாகர் வித்தியானத்தா கல்லூரி அதிபர் க.சிவலிங்கம், அம்பாந்தோட்டை விளையாட்டு சபையின் பணிப்பாளர் வைத்திய சஞ்சீவ சேனரத்ன ஆகியோர் கலந்து கொண்டதுடன், இந்த போட்டியின் நடுவர்களாக வவுனியாவிளையாட்டு சபையின் நடுவர் ஆரியரத்தினம், ரவிகரன் மற்றும் ராஜேந்திரன் தசறீத் ஆகியோர்கள் செயற்பட்டனர்.

நாணய சுழற்சி மூலம் வெற்றிபெற்ற முல்லைத்தீவு மாவட்ட கிரிக்கெட் சம்மேள அணி துடுப்பெடுத்து ஆட தீர்மானித்தது. இதனடிப்படையில் 20 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் 9 விக்கட்களை இழந்து 125 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அம்பாந்தோட்டை மாவட்ட கிரிக்கெட் சம்மேளன அணியினர் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டார்கள். இதில் இரண்டு ஓட்டங்களால் முல்லைத்தீவு மாவட்ட சம்மேள அணியினர் வெற்றியினை தனதாக்கி கொண்டனர்.
இந்த போட்டியில் சிறந்த பந்து வீச்சாளராக அம்பாந்தோட்டை மாவட்ட அணியினை சேர்ந்த பி.கே.லசந்த சிறிலால் தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை 2.3 ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்களையும், 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்த முல்லைத்தீவு மாவட்ட சம்மேளன அணியின் அருணாச்சலம் சஞ்சயன் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட இரண்டு அணியினருக்கும் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளதுடன் சிறந்த வீரர்களுக்கு கேடயங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட சம்மேளன அணிசார்பில் நினைவு பரிசில் ஒன்றினை அணியின் தலைவர் மருத்துவர் க.சுதர்சன் அவர்களால் அம்பாந்தோட்டை விளையாட்டு சபையின் பணிப்பாளர் வைத்திய சஞ்சீவ செனரத் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

<<Related News>>

<<Our other websites>>

 Tags : Mullaitivu vs Hambantota Cricket news Tamil

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here