ஐரோப்பிய லீக் : இலகு வெற்றியை சுவைத்தது அர்செனல்!

Arsenal vs AC Milan Europa League 2018 news Tamil

(Arsenal vs AC Milan Europa League 2018 news Tamil)

ஐரோப்பிய லீக் உதைப்பந்தாட்ட தொடரின் இறுதி 16 அணிகளுக்கிடையிலான முதலாவது லீக் போட்டியில் அர்செனல் அணி இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் அர்செனல் அணி, ஏசி.மிலன் அணியை எதிர்கொண்டு 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

போட்டியின் முதற்பாதியில் அபார ஆட்டத்தினை வெளிப்படுத்திய அர்செனல் அணி 2 கோல்களை அடித்தது.

15வது நிமிடத்தில் அர்செனல் அணியின் மெக்கட்டாரியன் கோலடிக்க, முதற்பாதியில் மேலதிகமாக வழங்கப்பட்ட நேரத்தில் (45+4) ரெம்ஸி கோலடித்து அணியை 2-0 என முன்னிலைப்படுத்தினார்.

பின்னர் இடம்பெற்ற இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோலடிக்கத் தவறிய நிலையில், அர்செனல் அணி 2-0 என வெற்றிபெற்றது.

<<Related News>>

<<Our other websites>>

 Tags : Arsenal vs AC Milan Europa League 2018 news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here