சம்பியன்ஸ் லீக் : டொட்டென்ஹம் அணியை வீழ்த்தியது ஜுவான்டஸ்

Tottenham Hotspur vs Juventus Champions League 2018

(Tottenham Hotspur vs Juventus Champions League 2018)

சம்பியன்ஸ் லீக் உதைப்பந்தாட்ட தொடரின் இறுதி 16 அணிகளுக்கிடையிலான 2வது லீக் போட்டியில் ஜுவான்டஸ் அணி, டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர் அணியை வீழ்த்தியுள்ளது.

இன்று அதிகாலை நடைபெற்ற இந்த இரண்டாவது லீக் போட்டி இங்கிலாந்தின் வெம்லே மைதானத்தில் நடைபெற்றது.

இந்த சுற்றின் முதல் லீக் போட்டியில் இரு அணிகளும் 2-2 என கோல்கள் அடித்து சமனிலையில் இருந்தன. இந்நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் இரண்டாவது லீக் போட்டியில் டொட்டென்ஹம் அணி போட்டியின் ஆரம்ப கோலை அடித்தது.

39வது நிமிடத்தில் டொட்டென்ஹம் அணியின் சன் ஹெயூங் மின் முதல் கோலை அடித்தார்.

தொடர்ந்து போட்டியின் முதற்பாதி 1-0 என நிறைவுக்கு வந்தது.
பின்னர் ஆரம்பித்த இரண்டாவது பாதியில் ஜுவான்டஸ் அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தது.

கொன்ஷெலோ ஹிகுவைன் 64வது நிமிடத்தில் முதல் கோலை அடிக்க, பௌலோ டெய்பலா 67வது நமிடத்தில் மீண்டுமொரு கோலை அடித்து அணியின் வெற்றியை 2-1 என உறுதிசெய்தனர்.

இதனடிப்படையில் இரண்டு லீக் போட்டிகளிலும் மொத்தமாக 4 கோல்களை அடித்திருந்த ஜுவான்டஸ் அணி 4-3 என வெற்றிபெற்றது.

<<Related News>>

<<Our other websites>>

 Tags : Tottenham Hotspur vs Juventus Champions League 2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here