உள்ளூர் டி20 சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியது என்.சி.சி!

Nondescripts cricket club wins Major T20 Sri Lanka

(Nondescripts cricket club wins Major T20 Sri Lanka)

இலங்கையின் உள்ளூர் கழகங்களுக்கிடையில் நடைபெற்ற இருபதுக்கு-20 தொடரின் சம்பியன் பட்டத்தை எஞ்சலோ பெரேரரா தலைமையிலான என்.சி.சி. கழகம் வென்றுள்ளது.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அஷான் பிரியஞ்சன் தலைமையிலான கொழும்பு கிரிக்கெட் கழகம் மற்றும் எஞ்சலோ பெரேரரா தலைமையிலான என்.சி.சி. (NCC) கழகங்கள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய என்.சி.சி. அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதிரடியாக ஆடிய பானுக ராஜபக்ஷ 51 பந்துகளில் 79 ஓட்டங்களையும், மஹேல உடவத்த 50 பந்துகளில் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் சார்பாக நுவான் துசார 32 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிரிக்கெட் கழகம் 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

என்.சி.சி. அணிசார்பில் சமிக கருணாரத்ன 4 விக்கட்டகளையும், லஹிரு குமார 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினார்.

இந்த போட்டித் தொடரில் எஸ்.எஸ்.சி. அணியின் ரவிந்து குணசேகர அதிக ஓட்டங்களை குவித்திருந்தார். இவர் 5 போட்டிகளில் விளையாடி 272 ஓட்டங்களை குவித்திருந்தார்.

பந்து வீச்சில் லசித் மாலிங்க 8 போட்டிகளில் விளையாடி 17 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Related News>>

<<Our other websites>>

 Tags : Nondescripts cricket club wins Major T20 Sri Lanka

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here