மலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்!

Winter Olympics 2018 Switzerland news Tamil
(Winter Olympics 2018 Switzerland news Tamil)

தென்கொரியாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரின் மகளிருக்கான மலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்தைச் சேர்ந்த மிச்சல் கிசின் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

மகளிருக்கான மலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில் சுவிஸ்லாந்தின் மிச்சல் கிசின் தங்கப்பதக்கத்தை வென்றதுடன், சுவிஸ்லாந்தைச் சேர்ந்த மற்றுமொரு வீரங்கனையான வெண்டி ஹோல்டனெர் வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்த போட்டியின் வெள்ளிக்கிண்ணத்தை அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேலா சிப்ரின் வென்றார்.

சுவிஸ்லாந்து குளிர்கால ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் 3 தங்கம், 6 வெள்ளி மற்றும் 2 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தமாக 11 பதக்கங்களை வென்றுள்ளது.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Winter Olympics 2018 Switzerland news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here