இறுதி மூன்று போட்டிகளிலும் ஏபி டி வில்லியர்ஸ்…!

De Villiers returns last three ODIs
(De Villiers returns last three ODIs)

இந்திய அணிக்கெதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் மீதமுள்ள 3 போட்டிகளுக்கான குழாமில் தென்னாபிரிக்க அணியின் அனுபவ வீரர் ஏபி.டி.வில்லியர்ஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

விரலில் ஏற்பட்டிருந்த உபாதை காரணமாக முதல் மூன்று போட்டிகளில் இருந்தும் வில்லியர்ஸ் விலகியிருந்தார். எனினும் இறுதி மூன்று போட்டிகளில் அவர் விளையாடுவார் என தென்னாபிரிக்க அணி தெரிவித்திருந்தது.

இதன்படி இறுதி மூன்று போட்டிகளுக்கான குழாமில் வில்லியர்ஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் நாளை நடைபெறவுள்ள 4வது ஒருநாள் போட்டியில் வில்லியர்ஸ் விளையாடுவது இதுவரையில் உறுதிசெய்யப்படவில்லை. இன்று இடம்பெறவுள்ள பயிற்சிகளின் அடிப்படையில் நாளை அவர் அணியில் இணைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க அணியின் தலைவர் டு பிளசிஸ் மற்றும் விக்கட் காப்பாளர் குயின்டன் டி கொக் ஆகியோர் உபாதையால் விலகியுள்ள நிலையில், டி வில்லியர்ஸ் நாளை விளையாடுவது தென்னாபிரிக்க அணிக்கு அவசியமாக உள்ளது.

நாளைய போட்டியில் டி வில்லியர்ஸ் விளையாடுவாராயின் அணித்தலைவர் மற்றும் விக்கட் காப்பாளராக செயற்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : De Villiers returns last three ODIs

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here