அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் திடீர் மரணம்!!!

Commonwealth Games javelin gold medallist Jarrod Bannister dies
(Commonwealth Games javelin gold medallist Jarrod Bannister dies)

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் ஜெரோட் பென்னிஸ்டர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.

33 வயதான ஜெரோட் பென்னிஸ்டர் நெதர்லாந்திதில் தங்கி, பயிற்சிபெற்றுவரும் போதே இவ்வாறு உயிழந்துள்ளார்.

ஜெரோட் பென்னிஸ்டரின் மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய தடகள சம்ளேனம் “மரணத்துக்கான காரணம் இதுவரையில் வெளிவரவில்லையென தெரிவித்துள்ளதுடன், இவர் சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்துள்ளார் என நம்புவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி குறித்த மரணம் திடீர் என ஏற்பட்டுள்ளதுடன், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஜெரோட் பென்னிஸ்டர் கடந்த 2018ம் ஆண்டு 89.02 மீற்றர் தூரத்திற்கு ஏட்டி எறிந்து அவுஸ்திரேலியாவில் தேசிய சாதனை படைத்துள்ளார்.

இதனையடுத்து 2010ம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.

இதேவேளை 2008 மற்றும் 2012ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் அவுஸ்திரேலியா சார்பாக போட்டியிட்டிருந்தார்.

எனினும் கடந்த 2013ம் ஆண்டு ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இவர், 20 மாதங்கள் போட்டிகளில் பங்கேற்கதடைவிதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

<<Related News>>

<<Our other websites>>

Tegs :  Commonwealth Games javelin gold medallist Jarrod Bannister dies

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here