எஞ்சலோ மெத்தியூஸ் தொடர்பில் ஒரு மகிழ்ச்சியான செய்தி!

Angelo Mathews news Tamil
(Angelo Mathews news Tamil)

இலங்கை அணியின் சகலதுறை வீரர் எஞ்சலோ மெத்தியூஸ் இன்று நடைபெற்ற உடற்தகுதி பரிசோதனையில் சிறந்த உடற்தகுதியை நிரூபித்துள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி உடற்தகுதியை நிரூபித்துள்ள மெத்தியூஸ் பங்களாதேஷில் நடைபெறவுள்ள முக்கோணத்தொடரில் கலந்துக்கொள்ளவுள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது மெத்தியூஸ் உபாதைக்கு உள்ளானார்.

பின்னர் ஓய்விலிருந்து மெத்தியூஸ் பங்களாதேஷில் நடைபெறவுள்ள முக்கோணத் தொடரில் விளையாடுவாரா? இல்லையா? என்பது இன்று நடைபெறும் உடற்தகுதி பரிசோதனையில் முடிவுசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது உடற்தகுதியை நிரூபித்து மெத்தியூஸ் குறித்த முக்கோணத்தொடரில் விளையாடவுள்ளார்.

இதேவேளை இலங்கை அணிக்கான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவர் நாளை நியமிக்கப்படவுள்ளார் என கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை அணித்தலைவராக மெத்தியூஸ் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதோடு, சந்திமாலும் தெரிவுசெய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Angelo Mathews news Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here