இரண்டாவது போட்டியில் இந்தியாவிடம் மண்டியிட்ட இலங்கை அணி

India vs Sri Lanka, 2nd ODI

(India vs Sri Lanka, 2nd ODI)

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இது இந்திய அணிக்கு வாழ்வா-சாவா போட்டியாகும். இதிலும் மண்ணை கவ்வினால், சொந்த மண்ணில் இலங்கையுடன் தொடரை இழந்ததில்லை என்ற நீண்ட கால பெருமையை பறிகொடுக்க வேண்டி இருக்கும்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பெரேரா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார்.

இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இருவரும் பொருப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர்.

அரைசதம் அடித்த தவான் 68 ரன்களில் சசித் பதிரானா பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஷ்ரேயாஸ் அய்யர் – ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து ரன்குவிப்பில் இறங்கினர். ரோஹித் ஷர்மாவும் அரைசதம் கடந்தார்.

இந்தநிலையில் இந்தியா அணியின் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 208 ஓட்டங்களையும், தவான் 68. அய்யர் 88, டோனி 7, பாண்டையா 8 ஓட்டங்களை பெற்றனர்.

இலங்கை அணிசார்பில், திசார பெரேரா 3 விக்கெட்களையும், பதிரன 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பிரகாசிக்க தவறியிருந்தனர்.

தரங்க 7 ஓட்டங்களுடனும், குணாதிலக 16, திரிமன்னே 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர், பின்னர் இணைந்த டிக்வெல்ல மத்தியூஸ் அணியினர் அதிரடி காட்டினாலும், டிக்வெல்ல 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் தொடர்ந்து விக்கட்கள் பறிபோனதால் இளநகை அணியால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை, இருப்பினும் மத்தியூஸ் இறுதிவரை போராடி 111 ஓட்டங்களை பெற்றார்.

மேலும், பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் சகால் 3, பும்ரா 2, புவனேஸ்வர், பாண்டையா, சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினர். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஷிகர் தவான் தேர்வானார்.

<<More News>>

<<Our other websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here