விராட் கோஹ்லிக்கு திருமாணமா??? : வெளியானது புதிய தகவல்!!!

0
202 views
virat kohli anushka sharma wedding news tamil today 2017

(virat kohli anushka sharma wedding news tamil today 2017)

இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் அடுத்த வாரம் திருமணம் பந்தத்தில் இணைய உள்ளதாக நேற்று இணையத்தளங்களில் செய்தியொன்று வைரலாக பரவிவந்தது.

பொலிவூட் நடிகையான அனுஷ்கா சர்மா மற்றும் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி ஆகியோர் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்த விடயம் அனைவருக்கும் தெரியும்.

எனினும் இவர்களுக்கு இம்மாதம் 11-12ம் திகதிகளில் இத்தாலியில் திருமணம் நடக்கவுள்ளதாகவும், இதில் நெருக்கமான உறவுகள் மாத்திரம் கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் நேற்று வெளியாகியது.

இதேவேளை விராட் கோஹ்லி ஒரு மாதம் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். இதனால் விராட் கோஹ்லிக்கு திருமணத்துக்காகவே போட்டிகளில் விளையாடாமல் ஓய்வுபெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருந்தன.

இந்நிலையில் விராட் கோஹ்லிக்கு திருமணமா? இல்லையா? என்பது தொடர்பில் கோஹ்லியின் ஊடக பேச்சாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் குறிப்பிட்ட இவர், “கோஹ்லிக்கு திருமணம் என்ற செய்தி முற்றிலும் ஒரு வதந்தி. கோஹ்லி தனது உடல் கஷ்டத்துக்காக ஓய்வுபெற்றுள்ளார். திருமணத்துக்காக இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

விராட் கோஹ்லிக்கு திருமணம் என்ற செய்தி கடந்த வருடம் டிசம்பர் மாதமும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

<<More News>>

<<Our other websites>>

Tags : virat kohli anushka sharma wedding news tamil today 2017, Tamil Sports News, Cricket news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here