அஸ்வின், புஜாராவை கடுப்பாக்கிய கவாஸ்கர்!!! : நடந்தது என்ன?

0
371 views
Sunil Gavaskar target Cheteshwar Pujara Ashwin fielding news Tamil

(Sunil Gavaskar target Cheteshwar Pujara Ashwin fielding news Tamil Today)

இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் புஜாரா ஆகியோரை கலாய்த்துள்ளார்.

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டி நேற்று சமனிலையில் முடிவடைந்தது.

இந்த போட்டியின் போது இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மற்றும் களத்தடுப்பில் ஈடுபட்ட வீரர்கள் சரியாக செயற்படவில்லையென்ற கருத்து பரவலாக பேசப்பட்டது.

இதன்படியே வீரர்களும் பல பிடியெடுப்புகளை நழுவவிட பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயற்படவில்லை. இந்நிலையில் இந்த போட்டியில் வர்ணனை செய்துக்கொண்டிருந்த சுனில் கவாஸ்கர் அஸ்வின் மற்றும் புஜாராவை கலாய்த்து தள்ளியுள்ளார்.

அஸ்வினை “களத்தடுப்பில் வளர வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லை. இன்னும் மாற வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை புஜாராவின் களத்தடுப்பை பார்த்த கவாஸ்கர் “ புஜாரா மிகவும் மெதுவாக ஓடுகிறார். ஹேன் பிரேக் போட்டுக்கொண்டு கார் ஓட்டுபவரை போல மிகவும் மெதுவாக ஓடுகிறார்” என காமடியாக கலாய்த்துள்ளார்.

இந்நிலையில் கவாஸ்கர் வெளியிட்டுள்ள இந்த கருத்து சமுகவலைத்தளங்களில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

<<More News>>

<<Our other websites>>

Tags :Sunil Gavaskar target Cheteshwar Pujara Ashwin fielding news Tamil Today, Tamil Sports News, Cricket news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here