இலங்கை கிரிக்கெட் தொடர்பில் அமைச்சர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!!! : முழுமையான விபரம்!!! (காணொளி)

virat kohli anushka sharma wedding news tamil today

(sports minister dayasiri jayasekara says Sri Lanka Cricket Changes)

இலங்கை கிரிக்கெட் சபையின் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு, ஆதரவு வழங்காத பட்சத்தில் நிர்வாகம் உடனடியாக கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் அமைக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் சபையின் நிர்வாகத்தை அமைக்கும் தேர்தல்களில் பக்கச்சார்பான நிலை ஏற்பட்டு வருகின்றது. இதனால் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், வாக்குகளை வழங்கும் உறுப்பினர்களின் பக்கம் செயற்பட்டு வருகின்றனர். இதனால் இலங்கை கிரிக்கெட்டின் தனித்துவம் மங்கி வருகின்றது.

இதனால் இலங்கை கிரிக்கெட் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடிவுசெய்துள்ளேன். 140 இற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் போது இதில் பக்கச்சார்பான வாக்குகள் பகிரப்படுகின்றன. இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 75 ஆக குறைக்க முடிவு செய்துள்ளேன். அதுமாத்திரமின்றி இலங்கையின் உள்ளூர் கிரிக்கெட்டை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களின் படியே அடுத்து வரும் உள்ளூர் போட்டிகள் நடத்தப்படும். இதன்படியே வீரர்கள் தெரிவும் இடம்பெறும். இந்த தீர்மானங்களுக்கு கிரிக்கெட் சபை ஆதரவு தராத பட்சத்தில், கிரிக்கெட் சபை உடனடியாக கலைக்கப்பட்டு புதிய கிரிக்கெட் நிர்வாகம் அமைக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

காணொளி இதோ…!

Video Cradit - www.gossipbro.lk

 

<<More News>>

<<Our other websites>>

Tags : sports minister dayasiri jayasekara says Sri Lanka Cricket Changes, Tamil Sports News, Cricket news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here