நேற்றைய போட்டியில் ரொனால்டோவின் புதிய சாதனை!!!

0
90 views
Real Madrid forward Cristiano Ronaldo news Tamil today 2017

(Real Madrid forward Cristiano Ronaldo news Tamil today 2017)

சம்பியன்ஸ் லீக் தொடரின் நேற்றைய எச் குழுவுக்கான போட்டியில் டொர்டமுன்ட் அணியை எதிர்கொண்ட ரியல் மெட்ரிட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

போட்டியின் முதற்பாதியின் ஆரம்பத்தில் மெயோரல் 8வது நிமிடத்திலும், ரொனால்டோ 12வது நிமிடத்திலும் கோலடிக்க, டொர்டமுன்ட் அபாமெயாங் 43வது நிமிடத்தில் கோலடித்தார்.

இதன்படி முதற்பாதியில் ரியல் மெட்ரிட் அணி 2-1 என முன்னிலை வகித்தது. எனினும் பின்னர் ஆரம்பித்த இரண்டாவது பாதியின் 3வது நிமிடத்தில் டொர்டமுன்ட் அணியின் அபாமெயாங் மீண்டுமொரு கோலை அடித்து, போட்டியை சமப்படுத்தினார்.

பின்னர் இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடிய நிலையில், 81வது நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணியின் வெஷ்குஷ் கோலடித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

இதேவேளை இந்த போட்டியில் 12வது நிமிடத்தில் கோலடித்த ரொனால்டோ சம்பியன்ஸ் லீக் தொடரின் ஒரு சீசனில் நடைபெற்ற லீக் போட்டிகள் அனைத்திலும் கோலடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த சீசனில் ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள ரியல் மெட்ரிட் அணி சார்பாக 9 கோல்களை ரொனால்டோ அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். இதேவேளை சம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக கோலடித்தவர் பட்டியலில் 117 கோல்களுடன் ரொனால்டோ முதலிடத்தை பிடித்துள்ளதுடன், லைனல் மெஸ்ஸி 97 கோல்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

<<More News>>

<<Our other websites>>

Tags : Real Madrid forward Cristiano Ronaldo news Tamil today 2017, Tamil Sports News, Cricket news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here