கோல் மழை பொழிந்து வெற்றிபெற்றது லிவர்பூல்!!!

Liverpool beat Spartak Moscow

(Liverpool beat Spartak Moscow Champions League match today)

சம்பியன்ஸ் லீக் உதைப்பந்தாட்ட தொடரின் குழு ஈ அணிகளுக்கிடையிலான போட்டியில் லிவர்பூல் அணி கோல் மழை பொழிந்து வெற்றியை பெற்றுக்கொண்டது.

நேற்றைய லீக் போட்டியில் லிவர்பூல் அணி ஸ்பார்டக் மொஸ்கோவ் அணியை எதிர்கொண்டு, 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

போட்டியின் ஆரம்பத்திலிருந்து எதிரணிக்கு கோல் வாய்ப்புகளை வழங்காத லிவர்பூல் அணி, முதல் கோலை பெனால்டி வாய்ப்புடன் பெற்றுக்கொண்டது. போட்டித் தொடங்கிய 4வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கௌடின்ஹோ கோலாக மாற்றி அணியின் கோல் எண்ணிக்கையை ஆரம்பிவைத்தார்.

தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தை செலுத்திய லிவர்பூல் அணி 15 மற்றும் 18வது நிமிடங்களில் கோலடித்து முதற்பாதியை நிறைவுசெய்தது. கௌடின்ஹோ தனது இரண்டாவது கோலையும், பையர்மினோ தனது முதலாவது கோலையும் அடித்தனர்.

3-0 என முன்னிலைவகித்த லிவர்பூல் அணி இரண்டாவது பாதியில் அபாரமாக ஆடி, மேலும் 4 கோல்களை குவித்தது. கௌடின்ஹோ 50வது நிமிடத்தில் கோலடித்து, தனது ஹெட்ரிக் கோலை பதிவுசெய்தார்.
இதையடுத்து மனே 47 மற்றும் 76வது நிமிடங்களில் கோலடிக்க, சல்ஹா 86வது நிமிடத்தில் கோல் அடிக்க, லிவர்பூல் அணி 7-0 என வெற்றிபெற்றது.

இந்த வெற்றியுடன் குழு ஈ யில் லிவர்பூல் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், செவில்லா அணி 9 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

<<More News>>

<<Our other websites>>

Tags : Liverpool beat Spartak Moscow Champions League match today, Tamil Sports News, Cricket news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here