டெஸ்ட் தரப்படுத்தலில் சந்திமாலுக்கு மிகப்பெரிய முன்னேற்றம்!!! : 2வது இடத்துக்கு முன்னேறினார் கோஹ்லி!

(Dinesh Chandimal ICC Test Batsmen ranking today news Tamil)

ஐசிசி இன்று வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் முதல் முறையாக இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் 366 ஓட்டங்களை குவித்ததனூடாக இவர் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் 8 இடங்கள் முன்னேறி 9வது இடத்தை பிடித்துள்ளார்.

இதேவேளை டெஸ்ட் தரப்படுத்தலில் 5வது இடத்திலிருந்த இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு இரட்டைச் சதம், சதம் மற்றும் அரைச்சதம் உள்ளடங்களாக 610 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதன்படி ஜோ ரூட், வோர்னர், வில்லியம்ஸன் மற்றும் புஜாரா ஆகியோரை பின்தள்ளி கோஹ்லி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்த பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸமித் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

<<More News>>

<<Our other websites>>

Tags : Dinesh Chandimal ICC Test Batsmen ranking today news Tamil, Tamil Sports News, Cricket news in Tamil

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here