அவுஸ்திரேலிய ஓபனில் விளையாடுகிறார் செரீனா…!

0
20 views
Serena Williams sports news Tamil today 2017

(Serena Williams sports news Tamil today 2017)

அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடுவார் என போட்டித் தொடரின் பணிப்பாளர் கிரைக் டிலே தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றிருந்த செரீனா, குழந்தை பிரசவசிக்க இருந்ததால் ஏனைய தொடர்களில் பங்கேற்கவில்லை. எனினும் கடந்த செப்டம்பர் மாதம் குழந்தை பிரசவித்து, மீண்டும் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இவர் விளையாடக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக கிரைக் டிலே தெரிவித்துள்ளார்.

36 வயதான செரீனா 7 தடவைகள் அவுஸ்திரேலிய ஓபன் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளதுடன், 23 ஒற்றையர் ஆட்ட கிரான்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

<<Related News>>

<<Our other websites>>

Tags : Serena Williams sports news Tamil today 2017, Rafael Nadal wins US Ope Latest Tennis news in tamil, Sports news in Tamil, Live tennis Update in Tamil, Tamil sports news, Tamil news, Latest sports news in  Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here