செல்ஸி – அட்லாடிகோ மெட்ரிட் அணிகளுக்கிடையிலான போட்டி சமனிலையில்…!

Chelsea vs Atletico Madrid match draw news Tamil today

(Chelsea vs Atletico Madrid match draw news Tamil today)

சம்பியன்ஸ் லீக் தொடரின் குழு சி அணிகளுக்கிடையிலான போட்டி சமனிலையில் முடிவடைந்தது.

நேற்றைய போட்டியில் செல்ஸி மற்றும் அட்லாடிகோ மெட்ரிட் அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை அடிக்க போட்டி சமனிலையில் முடிவடைந்தது.

போட்டியின் முதற்பாதியில் இரு அணிகளும் கோல்கள் அடிக்க தவறிய நிலையில், இரண்டாவது பாதி 0-0 என ஆரம்பித்தது.

இரண்டாவது பாதி ஆரம்பித்த, போட்டியின் 56வது நிமிடத்தில் அட்லாடிகோ மெட்ரிட் அணி தங்களது முதல் கோலை பதிவுசெய்தது. அந்த அணியின் நிகுவஸ் குறித்த கோலினை பெற்றுக்கொடுத்தார்.

1-0 என முன்னிலை வகித்து போட்டியில் அட்லாடிகோ அணி முன்னேறியது. எனினும் 75வது நிமிடத்தில் செல்ஸி அணியின் செவிக் கோலடித்து முன்னிலையை தகர்த்தார்.

பின்னர் இரு அணிகளும் கோலடிக்க தவறிய நிலையில் போட்டி 1-1 என சமனிலையில் முடிவடைந்தது.

இதன்படி சம்பியன்ஸ் லீக் சி குழுவின் புள்ளிப்பட்டியலில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருந்த செல்ஸி அணி 11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளதுடன், ரோமா அணி 11 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

<<More News>>

<<Our other websites>>

Tags : Chelsea vs Atletico Madrid match draw news Tamil today, Tamil Sports News, Cricket news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here