பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை வீழ்த்தியது பெயர்ன் முனிச்!

Bayern Munich beat Paris St-Germain Champions League today

(Bayern Munich beat Paris St-Germain Champions League today)

சம்பியன்ஸ் லீக் தொடரின் பி குழுவுக்கான நேற்றைய போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை எதிர்கொண்ட பெயர்ன் முனிச் அணி 3-1 என் ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் ஆரம்ப கோலை பெயர்ன் முனிச் அணியின் லவன்டோவ்ஸ்கி 8வது நிமிடத்தில் அடித்தார்.

பின்னர் தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தை செலுத்திய பெயர்ன் முனிச் அணி 37வது நிமிடத்தில் மீண்டுமொரு கோலை அடித்தது.

அந்த அணியின் டொலிஸ்ஸோ குறித்த கோலினை பெற்றுக்கொடுத்தார்.

முதற்பாதியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி கோல்கள் அடிக்க தவறிய நிலையில், முதற்பாதி 2-0 என முடிவடைந்தது.

இந்நிலையில் இரண்டாவது பாதி ஆரம்பித்த 5 நிமிடங்களில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி தங்களது முதல் கோலை பதிவுசெய்தது. மாப்பே குறித்த கோலை பெற்றுக்கொடுத்தார்.

2-1 என போட்டி விறுவிறுப்பாகிய நிலையில், இரண்டு அணிகளும் கோல்கள் அடிக்கும் முயற்சிகளை அடுத்தடுத்து மேற்கொண்டன. எனினும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைய, இறுதிவரை அந்த அணியால் மேலதிகமாக கோல்களை பெறமுடியவில்லை.

எவ்வாறாயினும் போட்டியின் 69வது நிமிடத்தில் பெயர்ன் முனிச் அணியின் டொலிஸ்ஸோ தனது இரண்டாவது கோலை பதிவுசெய்து, அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இந்த வெற்றியின் ஊடாக பெயர்ன் முனிச் அணி 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், பெயர்ன் முனிச் அணி அதே 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

<<More News>>

<<Our other websites>>

Tags : Bayern Munich beat Paris St-Germain Champions League today, Tamil Sports News, Cricket news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here