கிரிக்கெட் விதிமுறையை மாற்றினார் நடுவர்! : பரிதாபமாக வெளியேறிய மெத்தியூஸ்! : பொங்கியெழுந்த ரசிகர்கள்!!!

Angelo Mathews wicket 3rd Test vs Sri Lanka news Tamil

(Angelo Mathews wicket 3rd Test vs Sri Lanka news Tamil)

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் 5ம் நாள் ஆட்டம் தற்சமயம் டெல்லி பெரோ ஷா கொட்லா மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியில் இன்று 31 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்த நிலையில் இலங்கை அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

இதில் இலங்கை அணி சார்பில் களமிறங்கிய எஞ்சலோ மெத்தியூஸ் ஒரு ஓட்டத்துடன், ஜடேஜாவின் பந்து வீச்சில் ரஹானேவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

எனினும் ஜடஜோ, பந்துவீச்சு எல்லையை தாண்டியவாறு பந்தை வீசியிருந்தமை காணொளியில் தெளிவாக தெரிந்தது. எனினும் நடுவர் மெத்தியூஸை தடுக்கவோ? அல்லது நோ போல் பந்தை மறுபரிசீலனை செய்யவோ இல்லை. இதனால் மெத்தியூஸ் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த ஆட்டதிழப்பு தொடர்பில் தற்போது சமுகவலைத்தளங்களில் வைரலான கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. பெரும்பாலானோர் ஆட்டமிழப்பு இல்லையென வாதிட்டு வருகின்றனர்.

எஞ்சலோ மெத்தியூஸ் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 111 ஓட்டங்களை குவித்திருந்ததை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

<<More News>>

<<Our other websites>>

Tags : Angelo Mathews wicket 3rd Test vs Sri Lanka news Tamil, Tamil Sports News, Cricket news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here