சக்கர நாற்காலி மாஸ்டர் டென்னிஸ் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார் அல்பி ஹெவெட்!!!

Alfie Hewett wins Wheelchair Tennis Masters 2017 toady

(Alfie Hewett wins Wheelchair Tennis Masters 2017 toady)

சக்கர நாற்காலி மாஸ்டர் டென்னிஸ் தொடரின் சம்பியன் பிரித்தானியாவின் அல்பி ஹெவெட் சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளார்.

சக்கர நாற்காலி மாஸ்டர் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தின் லாஹ்போரோவில் நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்கொட்லாந்தின் கொர்டன் ரீடை, அல்பி ஹெவெட் எதிர்கொண்டார். இந்த போட்டியின் ஆரம்பத்திலிருந்து அபாரமாக ஆடிய அல்பி ஹெவெட் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

போட்டியின் முதல் செட்டை 6-3 என கைப்பற்றிய ஹெவட், இரண்டாவது செட்டை 6-2 என கைப்பற்றி, சம்பியன் பட்டத்தை சுவீகரித்துள்ளார்.

சக்கர நாற்காலி மாஸ்டர் டென்னிஸ் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றுள்ள முதல் பிரித்தானிய வீரர் என்ற பெருமையையும் அல்பி ஹெவெட் பெற்றுள்ளார்.

<<Related News>>

<<Our other websites>>

Tags : Alfie Hewett wins Wheelchair Tennis Masters 2017 toady, Rafael Nadal wins US Ope Latest Tennis news in tamil, Sports news in Tamil, Live tennis Update in Tamil, Tamil sports news, Tamil news, Latest sports news in  Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here