சக்கர நாற்காலி மாஸ்டர் டென்னிஸ் தொடரின் முதல் போட்டியில் அல்பி ஹெவெட் வெற்றி!

Wheelchair Tennis Masters Alfie Hewett wins today 2017

(Wheelchair Tennis Masters Alfie Hewett wins today 2017)

சக்கர நாற்காலி மாஸ்டர் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தின் லாஹ்போரோவில் நடைபெற்று வருகின்றது.

இதில் முதல் நாள் நிறைவில், தரப்படுத்தலில் 2வது இடத்திலுள்ள பிரித்தானியாவின் அல்பி ஹெவெட் மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த நடப்பு சம்பியன் ஜோகிம் ஜெராட் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

அல்பி ஹெவெட் தரப்படுத்தலில் 6வது இடத்தை இடத்திலுள்ள ஸ்டீபன் ஒல்சொனை எதிர்கொண்டார். இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய அல்பி ஹெவெட் முதல் செட்டை 7-6 (7-5)என தடுதாற்றத்துடன் வெற்றிக்கொண்டார். பின்னர் இரண்டாவது செட்டை 6-3 என ஸ்டீபன் ஒல்சொன் கைப்பற்றினார்.

இந்நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை 6-3 என இலகுவாக கைப்பற்றி, அல்பி ஹெவெட் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதேவுவேளை மற்றுமொரு போட்டியில், கொர்டன் ரீயிட் எதிர்கொண்ட ஜோகிம் ஜெராட் 6-3 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

<<Related News>>

<<Our other websites>>

Tags : Wheelchair Tennis Masters Alfie Hewett wins today 2017, Rafael Nadal wins US Ope Latest Tennis news in tamil, Sports news in Tamil, Live tennis Update in Tamil, Tamil sports news, Tamil news, Latest sports news in  Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here