ரஷ்ய வீரர்கள் ஐவருக்கு வாழ்நாள் தடை!!!

IOC bans five Russian Winter Olympic athletes 2017

(IOC bans five Russian Winter Olympic athletes 2017)

ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக ரஷ்யாவைச் சேர்ந்த 5 தடகள வீரர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் வாழ்நாள் தடைவிதித்துள்ளது.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த ஐவரும் ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

Russian
ரஷ்யாவைச் சேர்ந்த செர்கை சுடினோவ், அலெக்ஸி நெகோடிலோ, டிமிட்ரி ட்ரென்கோவ், யானா ரோமனாவா மற்றும் ஒல்கா விலுக்ஹினா ஆகிய குளிர்கால ஒலிம்பிக் வீரர்களுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 2011 மற்றும் 2015ம் ஆண்டுகளுக்கிடையில், ரஷ்ய அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளனர் என்ற குற்றச்சாட்டை சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் முன்வைத்து, மேற்குறித்த வாழ்நாள் தடையை விதித்துள்ளது.

ரஷ்ய தடகள வீரர்கள் கடந்த சில வருடங்களாக ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிவருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

<<More News>>

<<Our other websites>>

Tags : IOC bans five Russian Winter Olympic athletes 2017, World Athletics championship news in Tamil, Latest Athletics news in Tamil, Tamil news, latest sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here