கையில் ஒரு சதமின்றி தூங்க இடம் தேடி அலைந்த டென்னிஸ் வீராங்கனை!!!

0
88 views
Former world number four Jelena Dokic news Tamil 2017

(Former world number four Jelena Dokic news Tamil 2017)

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஜெலீனா டொகிச் அவரது தந்தையால் தனக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

முன்னாள் வீராங்கனையாக ஜெலீனா டென்னிஸ் தரப்படுத்தலில் 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், 2000ம் ஆண்டு விம்பில்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிவரை முன்னேறியுள்ளார்.

இந்நிலையில் இவரது வாழ்நாளில் தந்தையால் ஏற்பட்டுள்ள கொடுமைகள் குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெலீனாவை அவரது தந்தை மன மற்றும் உடல் ரீதியில் துஷ்பிரயோகத்துக்கு உற்படுத்தியுள்ளார். லெதர் இடுப்புப் பட்டியால் ஜெலீனாவை தாக்கியும், அவரது தாடையில் காலால் உதைத்தும் துன்புறுத்தியுள்ளார். இதனால் தினமும் காயங்களினாலும், ரத்த வெள்ளத்தினாலும் அவதிப்பட்டுள்ளார்.

ஜெலீனா 6 வயதிலிருந்து டென்னிஸ் விளையாட ஆரம்பித்துள்ளார். இந்த காலப்பகுதியிலிருந்து தொடர்ந்து இவர் இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் 2000ம் ஆண்டு விம்பில்டன் அரையிறுதிப்போட்டியில் ஜெலீனா தோல்வியடைந்தார். அரையிறுதிவரை ஜெலீனா சென்று போட்டியிட்டது மிகவும் பெரிய விடயமாக அனைவருக்கும் தெரிந்திருந்தது. அனைவராலும் பாராட்டவும் பட்டார். எனினும் பயிற்றுவிப்பாளரான ஜெலீனாவின் தந்தைக்கு குறித்த விடயம் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருந்தது.

அரையிறுதிப்போட்டி முடிந்த நாளன்று, மாலை ஜெலீனா ஹோட்டல் அறைக்கு சென்று நித்திரை செய்ய முற்பட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது தந்தை இடம்கொடுக்கவில்லை. அங்கிருந்து ஜெலீனாவை வெளியேற்றியுள்ளார்.

இதனால் அங்கிருந்த ரயில் நிலையத்தின், ரயிலொன்றில் மறைந்து நித்திரை செய்ய முயற்சித்துள்ளார். எனினும் ஜெலீனா மறைந்திருப்பதை இரவு 11 மணியளவில் அங்கிருந்த சுத்திகரிப்பாளர்கள் கண்டறிந்துள்ளார்.
பின்னர் விம்பில்டன் தொடரின் நடுவர் ஒருவர் ஜெலீனா தங்குவதற்கு இடமொன்றை தயார்செய்துள்ள நிலையில், அங்கு சென்று நித்திரைக்கொண்டுள்ளார்.

இதில் முக்கியமாக குறித்த நேரத்தில் ஜெலீனாவிடம் பணம், கடன் அட்டை மற்றும் வேறு எந்தவொரு பொருளுமே இல்லாமல், நிர்க்கதியாக நின்றுள்ளார்.

விம்பில்டனில் அரையிறுதிவரைச் சென்ற இந்த பெண்ணுக்கு இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்துள்ளமை, டென்னிஸ் ரசிகர்களிடையில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

<<Related News>>

<<Our other websites>>

Tags : Former world number four Jelena Dokic news Tamil 2017, Rafael Nadal wins US Ope Latest Tennis news in tamil, Sports news in Tamil, Live tennis Update in Tamil, Tamil sports news, Tamil news, Latest sports news in  Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here