டேவிஸ் கிண்ணத்தை கைப்பற்றியது பிரான்ஸ்!!!

0
11 views
France beat Belgium claim Davis Cup title 2017

(France beat Belgium claim Davis Cup title 2017)

டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரின் 106வது சீசன் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பமாகி, தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

16 நாடுகள் பங்குகொண்ட இந்த போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய அணிகள் மோதின.

இதில் பிரான்ஸ் அணி சார்பில், ஒற்றையர் பிரிவில் ஜோ-வில்ஃபிரெட் சோங்கா, லூகஸ் பவுலியும், இரட்டையர் பிரிவில் ரிச்சர்ட் கஸ்கெட் – பைரி-ஹியுகெஸ் ஹெர்பெர்ட் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

பெல்ஜியம் அணி சார்பில் ஒற்றையர் பிரிவில் டேவிட் கொப்பின், ஸ்டீவ் டார்சிஸும், இரட்டையர் பிரிவில் ருபன் பெமல்மான்ஸ் – ஜோரிஸ் டி லோரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் முதலில் நடைபெற்ற ஒற்யைர் பிரிவின் முதல் போட்டியில், லூகஸ் பவுலியை எதிர்கொண்ட கொப்பின், 7-5, 6-3 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

மற்றுமொரு ஒற்றையர் பிரிவு போட்டியில், ஜோ-வில்ஃபிரெட் சோங்கா மற்றும் டேவிட் கொப்பின் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் கொப்பின், 7-6, 6-3, 6-2 செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

இதேவேளை அடுத்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு போட்டியில், ரிச்சட் கஸ்கெட் – பைரி-ஹியுகெஸ் ஹெர்பெர்ட் ஜோடி, 6-1, 3-6, 7-6 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றது. இதன்படி 3-1 என்ற அடிப்படையில் பிரான்ஸ் அணி டேவிஸ் கிண்ணத்தை கைப்பற்றியது.

<<Related News>>

<<Our other websites>>

Tags : France beat Belgium claim Davis Cup title 2017, Rafael Nadal wins US Ope Latest Tennis news in tamil, Sports news in Tamil, Live tennis Update in Tamil, Tamil sports news, Tamil news, Latest sports news in  Tamil

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here