அபுதாபி கிரான்ட் பிரிக்ஷ் : இரண்டாவது பருவகால பயிற்சியில் ஹெமில்டன் முன்னிலை!!!

Lewis Hamilton tops Abu Dhabi GP second practice 2017

(Lewis Hamilton tops Abu Dhabi GP second practice 2017)

அபுதாபி கிரான்ட் பிரிக்ஷ் போர்முயுலா ஒன் காரோட்டப்பந்தயப் போட்டியின் இறுதிப்போட்டி நாளை அபுதாபியின் யெஸ் மரினா சேர்க்கிட்டில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்கான பருவகால பயிற்சிப் போட்டிகளில் உலகின் முன்னணி காரோட்டப்பந்தய வீரர்கள் தங்களின் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் நேற்று நடைபெற்ற இரண்டாவது பருவகால பயிற்சிப்போட்டியில், பிரிட்டனின் மேர்சிடிஸ் அணியின் முதற்தர வீரர் லிவைஸ் ஹெமில்டன் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

ஹெமில்டன் தனது வேகமான சுற்றுப்பிரதியினை 1.37.877 நிமிடத்தில் நிறைவுசெய்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார். இதையடுத்து பெராரி அணியின் செபஸ்டியன் வெட்டல் 1.38.026 செக்கன்களில் நிறைவுசெய்து இரண்டாவது இடத்தையும், 1.38.180 நிமிடத்தில் சுற்றை நிறைவுசெய்த ரெட்புல் அணியின் டேனியல் ரிக்காய்டோ 3வது இடத்தையும் பிடித்துக்கொண்டார்.

நாளை நடைபெறவுள்ள அபுதாபி கிரான்ட் பிரிக்ஷ் போர்முயுலா ஒன் போட்டியின் இறுதிப்போட்டி 305 கிலோமீற்றர் தூரம் கொண்ட 55 சுற்றுகளாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Lewis Hamilton tops Abu Dhabi GP second practice 2017, Sports news in Tamil, Motor sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here