எத்தனை சவால்கள் வந்தாலும், தாய் மண்ணுக்கு நான் மீண்டும் புகழ் சேர்ப்பேன்” : மார் தட்டும் லூஷியன் புஸ்பராஜ்…!

Lucian Pusparaj Asian Commencement championship 2017

(Lucian Pusparaj Asian Commencement championship 2017)

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்ட லூஷியன் புஸ்பராஜ் தென் கொரியாவில் இடம்பெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் முதலிடத்தை வென்றார்.

இவர் எதிர்வரும் 25 ஆம் திகதி அமெரிக்காவின் டெக்ஸ்சாஸில் நடைபெறவுள்ள “மிஸ்டர் அன்ட் மிஸ் அட்லஸ்” போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.

இந்தப் போட்டியில் கலந்து கொள்வது குறித்து, அவர் அளித்த செவ்வியில், “மிஸ்டர் அட்லஸ் கிண்ணத்தை எனது தாய் மண்ணுக்கு வென்று கொடுப்பேன்” என, லூஷியன் புஸ்பகுமார, தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை உடற்கட்டமைப்பு சம்மேளனம் அவருக்கு காட்டிய பாரபட்சங்கள் குறித்தும் அவர் இதன்போது மனம் திறந்துள்ளார்.

தான் மிஸ்டர் அட்லஸ் போட்டிக்காக அமெரிக்கா செல்வதைத் தடுக்கும் நோக்கில் அவர்கள், நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும், இதனால் தனக்கு விசா மறுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் தனது அனுசரணையாளர்கள் மீண்டும் தனக்கு விசாவை பெற்றுக் கொடுக்க கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டதாகவும் லூஷியன் தெரிவித்துள்ளார்.

மிஸ்டர் அன்ட் மிஸ் அட்லஸ் போட்டியை ஒழுங்கு செய்யும் “க்ளோபல் பொடிபீஃல்ட் பெஃடரேசன்” தன்னிடம் வினவிய கேள்விகளில் இருந்து அது தௌிவானதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர்கள் தன்னிடம் “நீங்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளீர்களா..? போன்ற பல கேள்விகளை வினவினர், ஆனால் இந்த தடை, குற்றச்சாட்டுக்கள் குறித்து பேசுவது மற்றும் தெரிந்து வைத்திருப்பது இலங்கையில் அந்த அமைப்பு மாத்திரமே”

எனவே, எனக்கு நன்கு நம்பிக்கை உள்ளது அவர்கள் தான் இப்போது என் காலை வாருவது என்று” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் லூஷியனுக்கு அமெரிக்கா செல்ல தற்போது விசா கிட்டியுள்ளது. எனவே, தனது அனுசரணையாளருக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், “நான் நிச்சயம் இந்தப் போட்டியில் வெல்வேன், எனக்கு நூற்றுக்கு நூறு வீதம் நம்பிக்கையுள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று என் தாய் மண்ணுக்கு நான் மீண்டும் புகழ் சேர்ப்பேன்” என லூஷியன் புஸ்பராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Lucian Pusparaj Asian Commencement championship 2017, Sports news in Tamil, Motor sports

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here