பிரேசில் கிரான்ட் பிரிக்ஷ் : செபஸ்டியன் வெட்டல் வசமானது சம்பியன் பட்டம்!

Sebastian Vettel wins Brazilian GP 2017

(Sebastian Vettel wins Brazilian GP 2017)

பிரேசிலில் நடைபெற்றுமுடிந்த பிரேசில் கிரான்ட் பிரிக்ஷ் காரோட்டப்பந்தயத்தின் சம்பியன் பட்டத்தை பெராரி அணியைச் சேர்ந்த ஜேர்மனியின் செபஸ்டியன் வெட்டல் சுவீகரித்துள்ளார்.

இந்த போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேர்சிடிஸ் அணியின் நம்பவர் ஒன் வீரர் லிவைஸ் ஹெமில்டன் 4வது இடத்தை பிடித்துக்கொண்டார்.

செபஸ்டியன் வெட்டல் சுமார் 305 கிலோமீற்றர் கொண்ட, 71 சுற்றுகள் அடங்கிய போட்டித்தூரத்தை 1:31:26.262 மணித்தியாலத்தில் நிறைவுசெய்து முதலிடத்தை பிடித்துக்கொண்டார்.

இதற்கு அடுத்தப்படியாக மேர்சிடிஸ் அணியின் வெல்டரி போட்டஸ் 2.762 செக்கன்கள் பின்தங்கி இரண்டாவது இடத்தையும், பெராரி அணியின் கிமி ரெய்கோனென் 4.600 செக்கன்கள் பின்தங்கி 3வது இடத்தை பிடித்துக்கொண்டார்.

இதில் போர்முயுலா ஒன் தரவரிசையில் முதலிடத்தை பிடித்திருக்கும் மேர்சிடிஸ் அணியின் லிவைஸ் ஹெமில்டன் 5.468 செக்கன்கள் பின்தங்கி 4வது இடத்தை பிடித்துக்கொண்டார்.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Sebastian Vettel wins Brazilian GP 2017, Sports news in Tamil, Motor sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here