ஆசிய கிண்ணத் தொடரின் முதல் வெற்றியை சுவைத்தது இலங்கை கனிஷ்ட அணி!

0
249 views
Sri Lanka U19 team beat UAE 2017

(Sri Lanka U19 team beat UAE 2017)

மலேசியாவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குற்பட்டோருக்கான ஆசிய கிண்ண போட்டித் தொடரின் முதல் வெற்றியினை இலங்கை அணி நேற்று சுவைத்துள்ளது.

நேற்று நடைபெற்ற ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்து வீசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐக்கிய அரபு இராச்சிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய ஐக்கிய அரபு இராச்சியத்தின் துடுப்பாட்ட வீரர்களை, இலங்கை அணியின் இளம் பந்து வீச்சாளர்கள் கதிகலங்க செய்து, வெறும் 66 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

பந்து வீச்சில் அசத்திய திசாரு ரஷ்மிகா 17 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளையும், ஜோன் டேனியல் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் வீழ்த்தியதுடன், பிரவீன் ஜயவிக்ரம 13 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

துடுப்பாட்டத்தில் செயின் ஹெய்டர் 16 ஓட்டங்களையும், ஹிரித்திக் 11 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

67 என்ற இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுகளை இழந்து 68 ஓட்டங்களை பெற்று வெற்றியை சுவைத்தது.

இலங்கை அணியின் கிமிது மெண்டிஸ் 27 ஓட்டங்களையும், ஆராச்சிகே 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Sri Lanka U19 team beat UAE 2017, Sports news in Tamil, Motor sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here