பிரேசில் கிரான்ட் பிரிக்ஷ் இரண்டாவது பருவகால பயிற்சி முடிவுகள்!

Brazilian Grand Prix 2nd Practice results 2017

(Brazilian Grand Prix 2nd Practice results 2017)

பிரேசில் கிரான்ட் பிரிக்ஷ் போர்முயுலா ஒன் காரோட்டப்பந்தயத்தின் இரண்டாவது பருவகால பயிற்சியில் மேர்சிடிஸ் அணியின் லிவைஸ் ஹெமில்டன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

நேற்றைய பருவகால பயிற்சியின் போது, ஹெமில்டன் 36 சுற்றுகள் காரை செலுத்தி, தனது வேகமான சுற்று பிரதியினை 1.09.202 நிமிடமாக பதிவுசெய்திருந்தார்.

இதேவேளை இரண்டாமிடத்தை மேர்சிடிஸ் அணியின் மற்றுமொரு வீரரான வி.போட்டஸ் பிடித்துக்கொண்டார். போட்டஸ் மொத்தமாக 43 சுற்றுகளை நேற்று நிறைவுசெய்திருந்தார்.

இதில் தனது வேகமான சுற்று பிரதியினை 1.09.329 நிமிடங்களில் செய்த போட்டஸ் இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்டதுடன், கிமிகோன் ரைக்கோனென் 0.548 செக்கன் பின்னடைவில் 3வது இடத்தை பிடித்துக்கொண்டார்.

இதேவேளை இதுவரை 4 சம்பியன் பட்டங்களை வென்றுள்ள ஹெமில்டன் இம்முறை 5வது சம்பியன் பட்டத்தை எதிர்பார்த்து போட்டியிடவுள்ளார். பிரேசில் கிரான்ட் பிரிக்ஷ் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது.

<<Related News>>

<<Our other websites>>

Tegs : Brazilian Grand Prix 2nd Practice results 2017, Sports news in Tamil, Motor sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here