ஒலிம்பிக் தங்கம் வென்ற கென்ய வீராங்கனைக்கு 4 ஆண்டுகள் தடை!

0
19 views
Four-year doping ban Jemima Sumgong

(Four-year doping ban Jemima Sumgong)

கென்யாவைச் சேர்ந்த ஒலிம்பிக் தங்கம் வென்ற தடகள வீராங்கனை ஜெமிம்மா சம்கோங்குக்கு 4 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச தடகள சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில், EPO எரித்ரோபொயிடின் என்ற தடகள வீராங்கனைகளுக்கு தடைசெய்யப்பட்ட மருந்தொன்றை ஜெமிம்மா சம்கோங் உட்கொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

பின்னர் விசாரணையில் ஜெமிம்மா சம்கோங்குக்கு ஊக்கமருந்து உட்கொண்டமை உறுதிசெய்யப்பட்டதால் கடந்த ஒக்டோபர் மாதம் இவருக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த மருந்தை தான் தவறுதலாக உட்கொண்டதாக தெரிவித்த அவர், தடையை மீள்பரிசீலனை செய்யுமாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மீண்டும் விசாரணைக்குற்படுத்தப்பட்ட ஜெமிம்மா சம்கோங்குக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜெமிம்மா சம்கோங் கடந்த வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் மரதன் போட்டியில் கென்யாவுக்கு தங்கம் வென்றுக்கொடுத்திருந்தார். எவ்வாறாயினும் 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள டோக்கிய ஒலிம்பிக்கில் ஜெமிம்மா சம்கோங் கலந்துக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

<<More News>>

<<Our other websites>>

Tags : Four-year doping ban Jemima Sumgong, World Athletics championship news in Tamil, Latest Athletics news in Tamil, Tamil news, latest sports news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here