தினேஷ் கார்த்திக், தவான் அரைச்சதம் : இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி!

India beat New Zealand 2nd ODI Pune 2017

(India beat New Zealand 2nd ODI Pune 2017)

நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுகளால் வென்று, தொடரை 1-1 என சமப்படுத்தியுள்ளது.

3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்றிருந்ததை தொடர்ந்து இரண்டாவது போட்டி பூனேவில் நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த, நியூஸிலாந்து அணி தடுமாறியது. எனினும் மத்திய வரிசை வீரரான நிக்கோலஸ் 42 ஓட்டங்களையும், கிரேன்தெ்ஹோம் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, 50 ஓவர்கள் நிறைவில் நியூஸிலாந்து அணி 9 விக்கட்டுகளை இழந்து 230 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் 231 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 46 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களையும், சிக்கர் தவான் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த வெற்றியின் அடிப்படையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளன.

<<More News>>

<<Our other websites>>

Tags : India beat New Zealand 2nd ODI Pune 2017, Tamil Sports News, New Cricket rules 2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here