வஹாப் ரியாஷின் செயலால் கடுப்பாகிய சப்ராஷ்! : பாதியில் எழுந்து சென்ற பயிற்றுவிப்பாளர்! (காணொளி இணைப்பு)

Pakistan fast bowler Wahab Riaz aborts run five times video

(Pakistan fast bowler Wahab Riaz aborts run five times video)

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டியில், வஹாப் ரியாஷின் பந்து வீச்சை அவதானித்த, தலைமை பயிற்றுவிப்பாளர் மிகி ஆதர் கடுப்பாகிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வந்தது. இரண்டாவது நாள் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் சார்பாக திமுத் கருணாரத்ன களத்தில் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தார்.

இதன்போது தனது 19 ஓவரை வீசிய வஹாப் ரியாஷ் 4 பந்துகளை வீசிவிட்டு, ஓவரின் 5வது பந்தை வீசுவதற்கு தடுமாறிய சம்பவம் பாகிஸ்தான் அணியை சோர்வடையச் செய்ததுடன், பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கோபத்தையும் கிளறியது.

அதாவது வஹாப் ரியாஷ் தனது 19வது பந்து ஓவரின் 5வது பந்தை வீசுவதற்கு, 5 தடவைகள் முயற்சியனை மேற்கொண்டார். எனினும் பந்தை கொண்டு துடுப்பாட்ட, வீரரை நோக்கி ஓடுவதும், வருவதுமாக இருந்த வஹாப் ரியாஷின் செயல் தலமை பயிற்றுவிப்பாளரின் கோபத்தை அதிகரிப்பதாக இருந்தது.

இதனால் கோபப்பட்ட தலைமை பயிற்றுவிப்பாளர் உடைமாற்றும் அறையிலிருந்து, வஹாப் ரியாஷை கோபத்துடன், அவதானித்ததுடன், கோபத்தை பொருத்துக்கொள்ள முடியாமல், பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரை தேடினார். பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் கிடைக்காததால் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்த மிகி ஆதர் மீண்டும் தனது இருக்கையில் வந்து இருந்துக்கொண்டார்.

எனினும் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் வருவதற்கு முன்னர் வஹாப் ரியாஷ் மீதமிருந்த இரண்டு பந்துகளையும் வீசிவிட்டார். பின்னர் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் வந்ததும் அவரை பார்த்து மிகி சற்று கோபத்துடன் பேச, பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் ஒன்றும் புரியாமல் நின்றார். எவ்வாறாயினும், அருகிலிருந்த வீரர்கள் நடந்த விடயத்தினை கூற, அதனை பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் கேட்டுக்கொண்டார்.

பின்னர் இது தொடர்பான காணொளியை அனைவரும் தொலைக்காட்சி ஊடாக பார்வையிட, சிரிப்பு மழை பொழிந்தது. இதில் காணொளியை பார்த்த மிகி ஆதரும் தான் கோபப்பட்ட விதத்தை பார்த்து சிரித்து மகிழந்தார்.

எது எப்படியோ ஒரு அனுபவம் வாய்ந்த வீரரொருவர் மைதானத்தில் இவ்வாறு பந்து வீசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

<<More News>>

<<Our other websites>>

Tags : Pakistan fast bowler Wahab Riaz aborts run five times video, Tamil Sports News, New Cricket rules 2017, Sri Lanka vs Pakistan test series 2017,Sri Lanka vs Pakistan test series 2017

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here