இங்கிலாந்து ரக்பி அணி வீரர் மனு டுய்லாகிக்கு சத்திர சிகிச்சை…!

England Rugby player Manu Tuilagi injured

(England Rugby player Manu Tuilagi injured)

இங்கிலாந்து ரக்பி அணியின் நடுக்கள வீரர் மனு டுய்லாகி இன்னும் 12 வாரங்களுக்கு அணியில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார் என இங்கிலாந்து ரக்பி வாரியம் தெரிவித்துள்ளது.

மனு டுய்லாகியின் முழங்காலில் ஏற்பட்டுள்ள பலத்த உபாதை காரணமாக அவருக்கு சத்திர சிகிச்சை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் எதிர்வரும் 12 வாரங்களுக்கு இவர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு டுய்லாகி ஏற்கனவே முழங்கால் உபாதை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை. எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் இவர் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட போதும், மதுபோதையில் பயிற்சி முகாமுக்கு வருகைத்தந்தார் என்ற குற்றச்சாட்டுக்காக தற்காலிக தடைக்கு ஆளானார்.

எனினும் மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட மனு டுய்லாகி லெய்செஸ்டர் பிரீமியர்ஷிப் தொடரின் முதல் போட்டியின் போது மீண்டும் உபாதைக்குள்ளாகியுள்ளார்.

<<More News>>

<<Our other websites>>

England Rugby player Manu Tuilagi injured, Rugby news in Tamil, Sports news in Tamil, Latest rugby news in Tamil, Live Rugby update

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here