மஹேல ஜெயவர்தன சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்ற நாள் இன்று!

Sri Lankan Cricketer mahela jayawardene retired

Sri Lankan Cricketer mahela jayawardene retired

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி ஓய்வுபெற்றார்.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத வீரர்களில் ஒருவரான மஹேல ஜயவர்தன 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 11814 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 448 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12650 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதேவேளை இருபதுக்கு-20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடக்கூடிய இவர், 55 போட்டிகளில் விளையாடி 1121 ஓட்டங்களை குவித்துள்ளார்.

இதேவேளை களத்தடுப்பில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியுள்ள மஹேல ஜயவர்தன, டெஸ்ட் போட்டிகளில் 205 பிடியெடுப்புகளையும், ஒருநாள் போட்டிகளில் 218 பிடியெடுப்புகளையும் எடுத்துள்ளதுடன், இருபதுக்கு-20 போட்டிகளில் 33 பிடியெடுப்பினை எடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத இவரின் திறமைகள் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 

 

<Related News>>

<<Our other websites>>

Sri Lankan Cricketer mahela jayawardene retired, Cricket News in Tamil, CPL news in Tamil, Latest Cricket News in Tamil, Tamil News, Thatstamil,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here