மகளிர் ரக்பி உலகக்கிண்ணம் : நம்பிக்கையுடன் களமிறங்கும் வேல்ஸ்!

0
19 views
Women’s Rugby World Cup Wales face New Zealand

Women’s Rugby World Cup Wales face New Zealand

மகளிர் உலகக்கிண்ண ரக்பி தொடரின் நியுஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது போட்டிக்கு வேல்ஸ் அணியின் தலைவராக கெரிஸ் பில்ப்ஸ் பெயரிடப்பட்டுள்ளதுடன், அணி விபரமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை வேல்ஸ் அணியின் பிரபல மத்தியகள வீரர் ரெபேக்கா டி பிலிப்போ அடிபாதத்தில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக வெளியேறியுள்ளதுடன், அவரின் இடத்துக்கு 18 வயதான இளம் வீராங்கனை இன்டியா பெர்பில்லன் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

மகளிர் ரக்பி தரவரிசையில் இரண்டாவது இடத்திலுள்ள வேல்ஸ் அணி இவ்வருடம் சம்பியனாவதற்காக கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. தரவரிசையில் முதலிடத்திலுள்ள நியுஸிலாந்து அணி மற்றும் மூன்றாவது இடத்திலுள்ள கெனடா ஆகிய அணிகள் வேல்ஸ் அணியை எதிர்க்கக்கூடிய பலமான வீராங்கனைகளை அணிக்குள் சேர்த்துள்ளன.

எனினும் இந்த போட்டித் தொடரில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என நம்புவதாக இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் ரோவ்லண்ட் பில்ப்ஸ் தெரிவித்துள்ளார்.இதேவேளை “போட்டியில் சரியான பக்கத்தை கையாள எண்ணியுள்ளதாகவும், நியுஸிலாந்து அணி மிகவும் பலமாக அணி. எனினும் எங்களது பலத்தை பரீட்சிக்கவும் முதல் போட்டி சிறப்பானதாக அமையும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வேல்ஸ் மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான மகளிர் உலகக்கிண்ணத்தின் முதல் போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அணி விபரம் :
Dyddgu Hywel (Scarlets); Elen Evans (RGC), Gemma Rowland (Dragons), Hannah Jones (Scarlets), Jasmine Joyce (Scarlets); Elinor Snowsill (Dragons), Keira Bevan (Ospreys); Caryl Thomas (Scarlets) Carys Phillips (c) (Ospreys), Amy Evans (Ospreys), Rebecca Rowe (Dragons), Mel Clay (Ospreys), Alisha Butchers (Scarlets), Rachel Taylor (RGC), Sioned Harries (Scarlets)

<<More News>>

<<Our other websites>>

Women’s Rugby World Cup Wales face New Zealand, Rugby news in Tamil, Latest rugby news in Tamil, Sports news in Tamil, Tamil news, Latest sports news in Tamil, Sports Tamil news, Tamil sports news, Sri Lanka rugby news in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here